‘பலவற்றிறுதி நீடுமொழி’ காண்க.பலசில என்பன உம்மைத் தொகையாகப் புணர்ந்தவழிச் செய்யுட்கண் ‘பலாஅஞ்சிலாஅம்’ எனத் திரிந்து புணர்தலு முண்டு. இத் தொடருக்குப் பலவும்சிலவும் என்பது பொருள். இப்புணர்ச்சி செய்யுட்கே உரியது. இதன்சொல்நிலை பலசில என்னும் செவ்வெண். (தொ. எ. 213 நச். உரை)