‘பலாஅஞ் சிலாம்’ : அம் என்பது உம்மின் திரிபே. பலவும் சிலவும்என்பது பொருள். அம், ஈண்டு எண்ணுப்பொருளில் வந்ததாகும்.கன்னடமொழியில் எண்ணுப்பொருளில் அம், உம் என்ற ஈரிடைச் சொற்களும்வருகின்றன.பல + அம் = பலாஅம் என்றாகும். வருமொழி அம்சாரியை என்பதனைக்குறிக்கவே அகரம் இடையே வந்துள்ளது. ‘பலாஅம்’ என்பதன்கண் அகரம் அறிகுறிஅளவினதே. (எ. ஆ. பக். 135, 136)