பலவற்றிறுதி புணருமாறு

பலவற்றைக் குறிக்கும் பல்ல – பல – சில -உள்ள – இல்ல – என்னும்சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை இடையே பெற்றுப் புணரும்.எ-டு : பல்லவற்றை, பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை….பல்லவற்றுக்கண்,பல்லவற்றுக் கோடு, பலவற்றுக்கோடு, சிலவற்றுக் கோடு,உள்ளவற்றுக்கோடு, இல்லவற்றுக் கோடு, செதிள், தோல், பூ (தொ. எ. 174,220 நச்.)அல்வழிக்கண், பலகுதிரை – என்றாற்போல இயல்பாகப் புணரும். (தொ. எ.210 நச்.)