‘பலவற்றிறுதி நீடுமொழி’ (2)

செய்யுள் வழக்கினையும் ஓசையினையும் கருதிவரும் தொடர் மொழிக்கண்,பலவற்றை உணர்த்திவரும் இறுதி அகரம் நீண்டு வரும் சொற்களும் உள.பல்ல – பல – சில்ல – சில – என்பவற்றுள் பல்ல – சில்ல – என்னும்தொடர்மொழிகள் வினையொடு தொடருங்கால் நின்றவாறே தொடருமாயின் ஓசைநயம்இன்மை கருதிச் சான்றோர் தம் செய்யுளுள் ‘ பல்லா கூறினும் பதடிகள் உணரார்,சில்லா கொள்கெனச் செ ப்புநர் உளரே ’ என்றாற் போல வழங்கியிருத்தல் வேண்டு மெனத்தெரிகிறது.உரையாசிரியன்மார் காட்டும் பலாஅம்- சிலாஅம்- என்பன பலவும் சிலவும்என்பவற்றின் விகாரம் ஆம். அவ்வாறாயின் அச்சொற்கள் மகர ஈற்றினவேயன்றிஅகர ஈறாமாறில்லை. (தொ.எ.213 ச.பால.)