‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’

பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தனையும், ‘அன்னஎன்னும் உவமக்கிளவி’ முதலியவற் றொடு சேர்த்துக் கொடுத்தல்.அஃதாவது பன்மைப் பொருள் உணர்த்தும் பல்ல – பல – சில – உள்ள – இல்ல- என்ற ஐந்து பெயர்களையும், அகர ஈற்றுள் வன்கணம் வந்துழியும்இயல்பாகப் புணரும் அன்ன – அண்மை விளி – செய்ம்மன – ஏவல்வினை – செய்தஎன்னும் பெயரெச்சம் – செய்யிய என்னும் வினையெச்சம் – அம்ம என்னும் உரையசை – என்பனவற்றொடு சேர்த்து எண்ணுதல். (தொ. எ. 210 நச்.)பலவற்றை உணர்த்தும் அகரஈற்றுப் பெயர்கள் எல்லாவற்றை யும் கொள்க.(எ-டு : கரியன, செய்யன, நல்லன, தீயன) (எ. கு. பக். 209)