‘உருவே உணர்வே ஒலியே தன்மைஎ னஈ ர் எழுத்தும் ஈரிரு பகுதிய’1. காணப் பட்ட உருவம் எல்லாம்மாணக் காட்டும் வகைமை நாடிவழுவில் ஓவியன் கைவினை போலஎழுதப் படுவது உருவெழுத் தாகும்’2. கொண்டஓர் குறியால் கொண்ட அதனைஉண்டென்று உணர்வது உணர்வெழுத்து ஆகும்’3. ‘இசைப்படு புள்ளின் எழாஅல் போலசெவிப்புலன் ஆவது ஒலியெழுத்து ஆகும்’4. ‘முதற்கா ரணமும் துணைக்கா ரணமும்துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்மிடற்றுப்பிறந்து இசைப்பது தன்மை யெழுத்தே’என்னும் இந்நான்கு பகுதியுள் ஒலியெழுத்தே செவிப்புல னாய்ப்பொருள்தரும் சிறப்புநோக்கி அதனை எடுத்தோதி னார். (நன். 256மயிலை.)