பலமொழிகளிலும் சிலவிதிகள்ஒருதன்மையவாய் இருத்தல்

குறிலை அடுத்த ஒற்று வருமொழி முதலில் உயிர் வரின் இரட்டும்.எ-டு : சொல் + அரிது = சொல்லரிது‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டல்’ (தொ. எ. 160 நச்.)‘மொதலொள் ஹ்ரஸ் வைகஸ்வரமொதவெ பரம் ஸ்வரமதாகெ நணலயளங்கள்குதயிஸுகும் த்வித்வம்’ (கருணாடக ஶ ப்தமணி 79)என்பது கன்னட இலக்கணம்.‘ஙமோ ஹ்ரஸ்வாதசி ஙமுன் நித்யம்’ (பாணினீ. 8 : 3 : 32)என்பது வடமொழி இலக்கணம்.வடமொழியில் சில எழுத்துக்களின் பின் குறிலை அடுத்து நிற்கும்மெய்யும் இரட்டுகிறது.எ-டு : ப்ரத் ய ங்ஙா த்மா, ஸு கண்ணீ ஶ : – என்பன காண்க.(எ. ஆ. முன்னுரை பக். iii )