இன்று பரசலூர் என்னும் பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. பறியலூர் என்ற இடத்தில் உள்ள வீரட்டம் சம்பந்தர் பாடல் பெற்ற கோயில். கருப்பறியலூர் என்றதொரு தலமும் முன்பு தெரியவந்தது. பறியலூர் என்பதற்குப் பொருள் என்ன என்பது தெரியவில்லை.
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே (134-2)
திரையார் புனல் சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச் சோலை வீரட்டத்தானே (134-7)
எனச் சுட்டும் சம்பந்தர் பாடல்கள் இப்பெயர் பற்றிய விளக்கம் தரவில்லை. எனினும், வீரட்டமே கோயில் பெயராக இருப்பதால் பறியலூர் கோயில் காரணமாகப் பெயர் பெற்றிருக்க வாய்ப்பில்லாதது போல் தோன்றுகிறது. பறியலூர் என்ற பெயரால் கருப்பறியலூர் என இன்னொரு ஊரையும் பார்க்கும்போது இரண்டிற்கும் என்ன நிலையில் ஒற்றுமை இருக்க இயலும் என்பதும் நோக்கத்தக்கது. பறிவை என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் சீந்தில்,நந்தியாவட்டம், தாவரம், தாழை எனப் பல பொருட்களைத் தரும் நிலையில் தாவரம் அடிப்படையாக இப்பெயர் அமைந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
256.பனங்காட்டூர் /வன்பார்த்தான் பனங்காட்டூர் 257.புறவார் பனங்காட்டூர்
திருப்பனங்காடு என்று இன்று சுட்டப்படும் தலம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பனைமரக்காடு காரணமாகம் பெயர் பெற்றது என்பது தெளிவு. தலமரமும்பனை இங்கு யாக அமைகிறது, சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம்.
மயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங் காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக் கட்பயிலாதார் பயில்வென்னே (86-6)
மஞ்சுற்ற மணிமாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத் தெங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே 86-8)
என்ற பாடலடிகள் பனங்காட்டூர் சிவன் கோயில் தோன்றிய பின்னர், மக்கள் வாழும் பகுதியாக மாறியது என்ற எண்ணத் தைத் தரும் நிலையில் அமைகிறது. மேலும் பனங்காட்டூர் என, பனை மரம் காரணமாகம் பல சர்கள் பெயர் பெற்றமைய, தனிமைப்படுத்த வன்பார்த் தான் பனங்காட்டூர் எனச் சுட்டினரோ எனத் தோன்றுகிறது எனினும் வன்பார்த்தான் என்பதற்குரியப் பொருள் தெளிவாக வில்லை. சேக்கிழாரும் இதனை, மாடநெருங்கு வன்பார்த்தான் பனங்காட்டூர் செல்வமல்கு திருப்பனங்காட்டூர் (ஏயர் 193, 194) என்று புகழ்கின்றார். தவிர, புறவார் பனங்காட்டூர் என்பது இன் னொரு ஊர்ப்பெயராக அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், பனையபுரம் என்று இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் காணப்படுகிறது.
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர்மலர் நிரைத் தாதளஞ் செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும்
வாளையும் கயலும் மிளிர் பொய்கை
வார்புனற் கரை யருகெலாம் வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும் சம்பந்தர் பாடும் நிலையில் பனங்காடாக இருந்தபோதிலும் நீர் வளமிக்கப் பகுதிகளையும் கொண்டு திகழ்ந்தது இவ்வூர் தெரிகிறது. இங்கும் பனங்காட்டூர் என்பது விளக்கமாக அமைகிறதே தவிர புறவார் விளக்கம் பெறவில்லை. இக்கோயிலில் உள்ள தலவிருட்சம் பனையாகும்.