பருந்தின் விழுக்காடு

பருந்து நடுவே விழுந்து தான் கருதிய பொருளை எடுத்துக் கொண்டு போவதுபோல முடிக்கப்படும் பொருளை முடித்துப்போம் இயல்பினதாகிய சூத்திரநிலைபருந்தின் விழுக்காடு எனப்படும். (‘பருந்தின் வீழ்வு’ என்பதும் அது.)(நன். 18 மயிலை.)எ-டு : ‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக் குறுகும்’(நன். 96)என்னும் இச்சூத்திரம் நன். 341, 114, 227, 120 என மேல்வரும்சூத்திரங்கள் எல்லாவற்றையும் வேண்டி நின்றவாறு.