பரிமேலழகர்

திருக்குறட்கு அமைந்த பண்டையுரையாசிரியர்களுள் தலை சிறந்தவர்.நுண்மாண் நுழை புலம் காட்டும் இவருரை என்றும் அறிஞருலகத்தேபோற்றப்படுதல் ஒருதலை. இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப.எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடற்கும் இவருரை காணப்படுகிறது.அதுவும்நுணுக்கம் வாய்ந்தது; ஆயின் குறிப்புரையாகவே உள்ளது. அவ்வுரையின்றேல்பரிபாடற்கு மெய்ப்பொருள் காண்டல் அரிது. வண்துவரைப் பெருமாள் என்றஇயற்பெயருடைய வைணவ அந்தணப் பெருமகனாராம் இவர் வடமொழி தென்மொழிஇரண்டிலும் பெரும்புலமை மிக்கார். இவரது திருக்குறளுரை ‘தண்டமிழின்மேலாம் தரம்’ எனப்படுகிறது.