பரிமாணனார் என்பவரால் யாப்புப் பற்றி வரையப்பட்ட இதன்நூற்பாக்களில் ஏழு யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களில் மேற்கோளாகக்காட்டப்படுகின்றன. அந்நூற் பாக்கள் தொடை விகற்பம், இரட்டைத் தொடை,வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா அடி வரையறை என்பன பற்றி அமைந்துள்ளன.(யா. வி. பக். 134, 182).