தமிழில் உத்திவகைகள் வடமொழியில் பரிபாடை என்ற சொல்லால்வழங்கப்படும்.‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ என்றாற்போலச் செவ்வனம்சொல்லுதல் உத்தியாம். செவ்வனம் சொல்லாது வேறொருவாற்றான் பொருந்தும்வகை உரைப்பது உத்தி வகையாம். உத்தி ‘யுக்தி’ (பொருந்தும் விதம்) என்றஆரியச் சொல்லின் திரிபாகும். (தொ. பொ. 665 பேரா.)சிவஞானமுனிவர் உத்தி என்பது பரிபாடை ஆகும் என்பர். (சிவஞா. பா. வி.பக். 9)