பரதசங்கிரகம்

இந்நூல் நாட்டிய சாத்திரமாகிய பரதத்தின் இலக்கணத்தைத் தொகுத்துச்சுருங்க உரைப்பது. பாயிரத்துள் இதன் பெயர் பரதசார சங்கிரகம் என்றுசுட்டப்பெற்றுள்ளது. இந்த நூற்பொருள் முத்தமிழொடும் தொடர்புடையதாகஇருக் கிறது. இயற்றமிழ்க் குறிப்புக்களும் இசைத்தமிழ் இலக்கணங் களும்பரதநாட்டியத்தின் இயல்பினை விரித்துரைக்கும் முகத்தால் இடம் பெற்றுள.இந்நூலிற் காணப்படும் சூத்தி ரங்கள் 262. அவற்றின் யாப்புவகைகள்வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை, நூற்பா என்பன. வெண்பாக்களேமிகுதியாக உள. இந்நூற்குப் பண்டைய உரையொன்று காணப்படுகிறது. தெளிவானசுருக்கவுரை அது.இந்நூலாசிரியர் பெயர் அறம்வளர்த்தான் என்பது. காலம் 16 ஆம்நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்ப.அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பெரும்புலவர் க. வெள்ளைவாரணனாரைப்பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.இப்பதிப் பில் இந்நூலோடு, அறம் வளர்த்தான் இயற்றிய ஆசிரிய நடையான்அமைந்த (தேவதைரூப அவினயத்தை விளக்கும்) அவினயக் கிரந்தம் என்ற நூலும்இடம் பெற்றுள்ளது.