பரணர் பாட்டியல்

இருடிகள் அல்லாத ஏனையோராய், மனத்தது பாடவும், சாவவும் கெடவும்பாடல் தரவும் வல்ல கபிலர் கல்லாடர் மாமூலர் பெருந்தலைச்சாத்தனார்முதலானாரோடு ஒப்ப எண்ணப்பட்டவர் பரணர். இவரால் இயற்றப்பட்ட பாட்டியல்நூல் ஒன்றிருந்ததாக அறிகிறோம். (யா.வி. பக். 371) (தொ.சொல். 81நச்.)