மழு என்ற படைக்கலத்தைக் குறிக்கும் பரசு என்பதும், பெருங் காயம்என்று பொருள்படும் இங்கு என்பதும், காரணம் என்ற பொருளில் வரும் ஏதுஎன்பதும் வடசொற்கள் ஆதலின், ஆரியச் சொற்களுக்குக் குற்றியலுகர ஈறுஇன்மையின், ஆரியச்சொற்கள் திரிந்த வடசொற்களாகிய இவை குற்றிய லுகர ஈறுஆகாது முற்றியலுகர ஈற்ற ஆயின. (தொ. எ. 36, 152 நச். உரை)பரசு – வழிபடு; இங்கு – தங்கு – என்று (தமிழில்) ஏவலொருமைவினையானாலும், முன்னிலைக்கண் குற்றியலுகர ஈறு வாராது என்ற கருத்தான்இவை முற்றியலுகர ஈறுகளேயாம்.ஆரியச்சொல்லுக்குக் குற்றியலுகர ஈறு இல்லாமல் இருக்க லாம். ஆனால்அவை தமிழிற்கேற்ப வடசொல்லாகத் திரிக்கப் பட்ட நிலையில், ஏனையதமிழ்ச்சொற்கள் போல, இங்கு ஏது தாது என்பன முதலான வடசொற்களும்குற்றியலுகர ஈற்றன என்று கோடலே பொருந்தும். (எ. கு. பக். 46)