உழுது உண்ணும் வாழ்க்கை முறையினைத் தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே அறிந்திருக்கின்றனர். இவ்வாறு வேளாண்மை மேற்கொள்வார், நன்செய் ஆயினும், புன்செய் ஆயினும் வயல்களின் நடுவே வீடு கட்டிக் கொண்டு வேளாண்மை செய்யும் வழக்கத்தினால் பயிர் விளைவிடங்களைக் குறிப்பிடும் சொற்கள் தழுவு பெயராக ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக மாறிவிட்டன. எஸ்டேட், காணி, கொம்பு, சோலை, தோட்டம், தொப்பு, பண்ணை, பற்று, வயல் என்றும் பயிர்விளைவிடப் பெயர்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.