பன் என்ற சொல் புணருமாறு

பன் என்பது பஞ்சினைப் பிரித்தெடுக்கும் தொழிலையும் பஞ்சினையும்குறிக்கும்.அஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வந்துழி உகரமும்வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழி உகரமும்,யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஒற்று இரட்டுதலும் பெற்றுப்புணரும்.எ-டு : பன்னுக் கடிது, பன்னு நெடிது, பன்னு வலிது, பன் யாது,பன் னரிது; பன்னுக் கடுமை, பன்னு நெடுமை, பன்னுவலிமை, பன்யாப்பு,பன்னருமை. (தொ. எ. 345 நச்.)