செய்யுள் வகைகளைப் பற்றிக் கூறும் பாட்டியல் நூல்களில் மிக்கதொன்மையானது. இந்நூல் ஒருவரால் இயற்றப்பட் டது என்றும், பன்னிருவரால்இயற்றப்பட்டது என்றும் கூறுவர். இதன்காலம் 12ஆம் நூற்றாண்டிற்குமுற்பட்ட காலம்; காலம் துணியக் கூடவில்லை. இதன்கண், பாயிரம் நீங்கலாக231 நூற்பாக்கள் உள. மேற்கோளாக வந்த நூற்பாக் களையும் கூட்டியுரைப்பர் ஒருசாரார். எழுத்தியல், சொல் லியல், இன இயல் என்பனஇந்நூற்பாகுபாடுகள். இனவிய லுள் பிரபந்த வகைகள் விரிவாகப்பேசப்படுகின்றன. எழுத்தியலும் சொல்லியலும் முறையே எழுத்தும் சொல்லும்பற்றிய பன்னிரு பொருத்த நிலைகளைப் பேசுவதால், இந்நூற்குப் பெயர்அத்தொகைப்பெயரால் அமைந்தது என்றும் கூறுவர்.