அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவராலும் தனித்தனி ஒவ்வொருவரும்ஓரோரு படலம் யாக்கப் பன்னிரண்டு படலங்களாக அமைந்த புறப்பொருள் நூல்.வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி மயங்கி வருவது பெரும்பாலும் அகத்திணைப்பாடற்கண் இல்லை என்பதற்குப் பன்னிருபடலப் பெருந் திணைச் சூத்திரம்மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. வெட்சி கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை,நொச்சி-என்ற திணைகள் தம்முள் மறுதலைப்பட்டன என்பதனை விளக்கவும்பன்னிரு படலச் சூத்திரங்கள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக்.128, 571)அகத்தியன்பால் தமிழிலக்கணத்தைக் குற்ற மற உணர்ந்த தொல்காப்பியன்முதலான பன்னிருவராலும் பாங்குறப் பகரப்பட்டதாகப் பன்னிருபடலம்சொல்லப்படுகிறது, புறப்பொருள்வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்துள்.