பத்து + இரண்டு : பத்து என்பதன் ஈற்றுயிர்மெய் கெட நின்ற ‘பத்’என்பதன் தகர ஒற்றுக் கெட, ப என்ற தனிக்குறிலை அடுத்து னகரஒற்றுஇரட்டித்துப் ‘பன்ன்’ என்று நிற்ப, இரண்டு என்ற வருமொழி புணரப்பன்னிரண்டு என முடிந்தது என்பர் தொல்.பத்து என்பதற்குப் பான் என்பது பரியாயப் பெயர். பான் + இரண்டு :நிலைமொழி முதலெழுத்துக் குறுகிப் ‘பன்’ என்றாகி நிற்க,தனிக்குறில்முன் ஒற்றிரட்டிப் பன்னிரண்டு எனப் புணர்ந்தது எனலாம்.இங்ஙனமே பன்னொன்று, பன்மூன்று, பன்னான்கு, பன்னாறு எனக்கன்னடமொழிக்கண் வழங்குதல் காணத்தக்கது. (எ. ஆ. பக். 171)