பனை என்பதன் புணர்ச்சி

பனை என்பது அம்முப் பெற்று ஐ கெட்டுப் பனங்காய், பனஞ்செதிள்,பனந்தோல், பனம்பூ என வரும். பனை ஈண்டுப் புல்லினம்.பனை + அட்டு = பனாஅட்டு என ஐ கெட்டு ஆகாரம் புணர்ந்துமுடியும்.இது போலவே, ஓரை + நயம் = ஓராநயம், விச்சை + வாதி = விச்சாவாதி,கேட்டை + மூலம் = கேட்டா மூலம், பாறை + கல் = பாறாங்கல், பாறங்கல் எனமுடியும்.பனை + கொடி = பனைக்கொடி (தொ. எ. 283 – 285 நச்.)பனையின் குறை என்றாற்போல உருபிற்குச் சென்ற சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் வரும். (பனையினது குறை முதலாக ஆறன் பொருள்படஉரைக்க). (285 நச். உரை)பனை என்ற (மரப்) பெயர் நிலைமொழியாக நிற்ப, கொடி வருமொழி யாயின்இடையே ககரமெய் மிகும். பிற வன்கணம் வரின், நிலைமொழியீற்று ஐகாரம் கெடஇடையே அம்முச் சாரியை மிகும். ‘திரள்’ வருமொழியாயின் வலி மிகுதலும்‘ஐ’ போய் அம்முச் சாரியை பெறுதலுமாம். ‘அட்டு’ வருமொழி யாயின்நிலைமொழியீற்று ஐ கெட வருமொழி முதல் அகரம் நீளும். இவையெல்லாம்வேற்றுமைப் புணர்ச்சி.வருமாறு : பனை + கொடி = பனைக்கொடி (பனை உருவத்தை எழுதிய கொடி);பனை + காய், செறும்பு, தூண், பழம் > பன் + அம் + காய், செறும்பு….. = பனங்காய், பனஞ்செறும்பு,பனந்தூண், பனம்பழம்; பனை + திரள் = பனைத்திரள், பனந்திரள்; பனை +அட்டு > பன் + ஆட்டு = பனாட்டு.(பனந்தூண் – பனையால் செய்யப்பட்டதூண்; பனாட்டு – பனையினதுதீங்கட்டி) (நன். 203)