பனை என்னும் அளவுப் பெயர்ப்புணர்ச்சி

பனை என்னும் அளவுப் பெயர் குறை என்னும் வருமொழி யொடு புணரும்வழிஇன்சாரியை பெறும்; சிறுபான்மை இன்சாரியை பெறாது வருமொழி வல்லெழுத்துமிகுதலும் கொள்க.வருமாறு : பனையின் குறை, பனைக்குறைஇதற்குப் பனையும் அதிற் குறைந்ததும் என உம்மைத் தொகைப்படப் பொருள்கூறுக. (தொ. எ. 169 நச்.)