பனி என்ற காலப்பெயர் நிலைமொழியாய் வருமொழி வன் கணத்தொடுபுணருமிடத்து அத்துச்சாரியையும் இன்சாரியை யும் பெறும்.எ-டு : பனியத்துக் கொண்டான் – பனியிற் கொண்டான், சென்றான்,தந்தான், போயினான்.பனிக்காலத்தில் கொண்டான் என்றாற்போல ஏழன் பொருள்விரிக்கப்படும். (தொ. எ. 241 நச்.)