பனை + அட்டு : ஈற்று ஐகாரம் தனக்கு முன் உயிர்முதல் மொழி வர, ஒருசொல் தன்மைப்படப் புணருமிடத்துச் சொல்லின் இடையது ஆதலின், அஃதுஒருமாத்திரை அளவு ஒலிக்கும். ‘பனைஅட்டு’ பனஅட்டு என்றொலிக்கும். பனஎன்பதன் ஈற்று அகரமும் அட்டு என்பதன் முதல் அகரமும் சேர்ந்து ஓர்ஆகாரமாகிப் பனாட்டு என ஒலிக்கும். வரு மொழி ‘அட்டு’ என்பதனை அறிவிக்க,ஆகாரத்தின் முன்னர் அகரம் அறிகுறியாக எழுதப்படும்; எழுதப்படுதலன்றிஅகரம் ஒலிக்கப்படாது. இங்ஙனம் பனாஅட்டு என்ற சொல் அமையும்.நன்னூலார் அகரத்தை விடுத்துப் பனாட்டு என்றே கூறினார். (பனாட்டு -பனையினது தீங்கட்டி) (எ. ஆ. பக். 146)