பனம்பாரம்

தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணக்கராகிய பனம்பார னார் இயற்றியஇலக்கண நூல்; அவர் பெயராலேயே அப்பெயர் பெற்றது. அகத்திணை அல்லாதவழிவஞ்சியடி யொடு சொற்சீரடி மயங்கும் என்பதற்குப் பனம்பாரச் சூத்திரம்ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. (யா. வி. பக். 125)