பனந்தாள்

பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியிருத்தலால் கோயில் பெயர் பனந்தாள் என்றாகி, பின்னர் ஊர்ப்பெயரும் பனந்தாளாக அமைந்தது எனத் தெரிகிறது. இன்று திருப்பனந்தாள் என்று வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புரம் மூன்றும்,
தீச்சரத்தான் செற்றான் திருப்பனந்தாள்
தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து
என்பது க்ஷேத்திரக் கோவை வெண்பா (21). மேலும் புராணக் கதையின்படி தாடகை வணங்கியதன் காரணமாகத் தாடகை யீச்சரம் எனப்பெயர் அமைந்தது என்பது தெரிகிறது. சம்பந்தர் தம் தேவாரத்தில்,
தண்பொழில் சூழ் பனந்தாட்டிருத் தாடசையீச்சரமே (320-1)
அறைமலி தண்புனலும் மதியாடரவு மணிந்த
தலையவனூர் பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே (320-7)
போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரியப் பொழில் வாய்த்
தாதவிழும் பனந்தாட்டிருத் தாடகையீச்சரமே (320-10)
என இதன் செழுமை குறித்துப் பாடுகின்றார். சேக்கிழாரும் செழுமலர்ச் சோலைவேலித் திருப்பனத்தாள் என (17-25-3-4) இதனை இயம்புகின்றார்.