பந்தணை நல்லூர்

பந்தணை நல்லூர் என்று இன்றும் சுட்டப்படும் இவ்வூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அம்பிகை ஆடிய பந்து வந்து அணைந்ததால் பந்தணை நல்லூர் எனப்பெயர் பெற்றது என்பர். சம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். சம்பந்தர் அப்பர் இருவருமே பந்தணை நல்லூர் என்று மட்டுமே தம் பதிகத்தில் சுட்டுகின்றனர் (224). எனவே இவ்வூர் பற்றிய விளக்கம் எதுவும் தெளிவுறவில்லை. பேசக்கிழார் தம் பாடல் களில்,
பருக்கை வரை யுரித்தார் தம் பந்தண நல்லூர் (பெரிய. 34-289-3)
பாங்கு பந்தண நல்லூர் (33-250-2)
என பந்தண நல்லூர் என இதனைச் சுட்டுகின்றார்.