‘பத்து’ வருமொழியாக, ஒன்று முதல்எட்டனொடு புணர்தல்

வருமாறு : ஒன்று + பத்து > ஒன்று + பஃது = ஒருபஃது, ஒருபது (தொ. எ. 438, 439)இரண்டு + பத்து > இரண்டு + பஃது = இருபஃது, இருபது (தொ. எ. 438, 439)மூன்று + பத்து > மூன்று + பஃது = முப்பஃது, முப்பது (தொ. எ. 440,441)நான்கு + பத்து > நான்கு + பஃது = நாற்பஃது, நாற்பது (தொ. எ. 442)ஐந்து + பத்து > ஐந்து + பஃது = ஐம்பஃது, ஐம்பது (தொ. எ. 443)ஆறு + பத்து > ஆறு + பஃது = அறுபஃது, அறுபது (தொ. எ. 440 நச்.)ஏழ் + பத்து > ஏழ் + பஃது = எழுபஃது,எழுபது (தொ. எ. 389 நச்.)எட்டு + பத்து > எட்டு + பஃது = எண்பஃது, எண்பது (தொ. எ. 444 நச்.)