‘பத்து’ பிறபெயரொடு புணருமாறு

நிறையும் அளவும் அல்லாத பிறபெயர் வந்துழி, இன்சாரியை ‘இற்று’ எனத்திரிய, பதிற்றுவேலி, பதிற்றியாண்டு, பதிற்றடுக்கு, பதிற்றுமுழம்,பதிற்றொன்று,பதிற்றிரண்டு, பதிற்றுநான்கு, பதிற்றைந்து, பதிற்றாறு,பதிற்றேழ், பதிற்றெட்டு, பதிற் றொன்பது, பதிற்றுப்பத்து எனப் பண்புத்தொகைக்கண் முடிந்தவாறு.பதின்முழம் முதலாக இன்சாரியை திரியாமையும் கொள்க.(தொ. எ. 436 நச். உரை)