அடிப்படைச்சொல் பத்து என்பதே. பத்து என்பதன் இடையே தகரஒற்றுக் கெடஅவ்விடத்து ஆய்தம் வரப் பஃது என்றாகும் என்பர் தொல்.பஃது என்பதன் ஆய்தஒலி ஈற்றெழுத்தாகிய தகரஒலியை ஒட்டித் திரிந்துஒலிப்பதாகும். அதுவே நாளடைவில் தகரம் போல ஒலிக்கப்படத் தொல்.காலத்துக்கு முன்னரேயே பத்து என்பது இயற்சொல் போல வழக்கத்தில்மிகுந்துவிட்டது என்பதும், பஃது அதன் திரிபாகக் கொள்ளப்பட்டதுஎன்பதும் போதரும். (எ. ஆ. பக். 172)