‘பத்து’ நிறைப்பெயர் அளவுப்பெயர்இவற்றொடு புணர்தல்

பத்து நிலைமொழியாக, வருமொழிக்கண் நிறைப்பெயரும் அளவுப்பெயரும்வருங்கால், இடையே இன்சாரியை வரும்.எ-டு : பதின்கழஞ்சு, பதின்மா, பதின்கலம், பதின்சாடி(தொ. எ. 436 நச்.)வருமொழி உயிராயின் இன்சாரியை ‘இற்று’ ஆகும்.எ-டு : பத்து + இன் + அகல் = பதிற்றகல்; பத்து + இன் + உழக்கு =பதிற்றுழக்கு (121 நச். உரை)