‘பத்து’ ஒன்று முதல் எட்டு ஈறாம்எண்களொடு புணர்தல்

பத்து என்பதன் இறுதிக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட, இன்சாரியைஇடையே வர, பத்து + இன் + ஒன்று = பதினொன்று என வரும்.பதின்மூன்று, பதினைந்து, பதினாறு, பதினேழ், பதினெட்டு என்பனவும்அன்ன.‘பதின் நான்கு’ – இன்னின் னகரம் கெட, வருமொழி நகரம் னகரமாய்த்திரிய, பதினான்கு என முடியும்.பத்து + இரண்டு : ‘பத்தின் முன் இரண்டு புணருமாறு’ காண்க.பத்து + இரண்டு என்புழி, நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம்மெய்யொடும் கெட, தகர ஒற்று னகரமாகி இரட்டிப்ப, பன் + ன் + இரண்டு =பன்னிரண்டு ஆயிற்று. (தொ. எ. 433, 434நச்.)