பத்தின்முன் இரண்டு புணருமாறு

‘பத்து’ நிலைமொழி; ‘இரண்டு’ வருமொழி. நிலைமொழி யீற்றுஉயிர்மெய்யாம் தகர உகரம் கெட, ஈற்றயல் தகர ஒற்று னகர ஒற்றாக,‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்ற விதிப்படி,பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னி ரண்டு என்றாகும். (நன். 198)