மாறா மாலாலே மாறாமாமாறா மாவேளே மாறாமாமாறாமா கோவா மாறாமாமாறாமா வாதே மாறாமா.இது, நடுப் பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத் துள்ள அகவிதழ்புறவிதழ் சென்று வலமே அடுத்த புற விதழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்துஅடுத்த அகவிதழ் வழிபுறவிதழ்சென்று முதலடிமுற்றி, மறித்தும்பொகுட்டினின்றும் கீழ் வலக் கோணத்துள்ளஅக விதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ளஅகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி, மறித்தும்பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ளபுறவிதழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழிஅதன்புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்றுமேலிடக்கோணக் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவிதழகவிதழ்சென்றுபொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களிற் சென்றுநான்காமடி முற்றியவாறு காண்க.