பதி

மக்கள் வாழ்விடம், உறைவிடம் “பதி” எனப்பட்டது. “பதியெழுவறியாப் பழங்குடிகள்” என்று சிலப்பதிகாரத்தில் இவ்வடிவம் வந்துள்ளது.[18] இவ்வடிவம் அருகியே வந்துள்ளது.
“திருப்பதி” என்ற கூட்டு வடிவமும் வழங்கி வருகின்றது. வைணவத் தலங்களைத் திருப்பதிகள் எனக் குறிப்பிடும் வழக்கத்தையொட்டி பெயரிடப்பட்டுள்ளது.
உதாரணமாக; மதுரை மாவட்டத்திலுள்ள அப்பன் திருப்பதி என்ற ஊரைச் சொல்லலாம்.