பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத்துள், ஒவ்வொருபத்துப்பாட்டும் ஒரு மன்னன்மேல் பாடப்பட்டவற்றின் இறுதியில்,அப்பத்துப்பாடல்களின் கருத்தையுட் கொண்டு பாடப்பட்ட பாடல்;கிடைத்துள்ள (முதலும் இறுதியும் நீங்கலான) எட்டுப்பத்துப்பாடல்கட்கும் எட்டுப் பதிகங்கள் காணப்படுகின்றன. பதிகத்தின்இறுதியில் உரைநடையால் புலவர் பாடிப் பெற்ற பரிசில்கள் உரையாசிரியரால்குறிக்கப் பட்டுள. பத்துப்பாடல்கட்கும் அமைந்த சிறப்புப் பெயர் களும்வரையப்பெற்றுள. இப்பதிகம் நூலாசிரியரால் பாடப் பட்டன அல்ல எனவும்உரையாசிரியர்தாமே பாடின என்றும் கூறுவர்.