பத்து வெண்பா அல்லது பத்துக் கலித்துறை இவற்றால் அந்தாதித் தொடையாகமண்டலித்துப் பாடப்படும் பிரபந்தம். (இவ்விரண்டு யாப்பினாலும்அடுத்தடுத்து இருபது பாடலாக அந்தாதித்துப் பாடுவதே இரட்டைமணிமாலையாம்என்க.) இவை வெண்பாப் பதிற்றந்தாதி, கலித்துறைப் பதிற்றந்தாதி எனப்பெயர் பெறும். (இ. வி. பாட். 81)