பதம் எனப்படுவது

எழுத்து ஓரெழுத்தாகத் தனித்தோ இரண்டு முதலாகத் தொடர்ந்தோ பொருள்தருவது பதம் எனப்படும். (பதம், மொழி, சொல் இவை ஒரு பொருட் கிளவிகள்).(நன். 128)இறிஞி – மிறிஞி எனில் எழுத்துத் தொடருமேனும் தன்னை யுணர்த்துமன்றிப் பிறபொருள் தாராமையின் பதம் ஆகாது என்பார் ‘பொருள் தரின்’என்றார். ‘ தன்னை உணர்த்தின் எழுத்தாம்;பிறபொருளைச், சுட்டுத ற்கண்ணேயாம் சொல் ’ என்ப ஆதலின், பொருள் என்றது பிற பொருள் என்பார் ‘உணர்த் தின்’என்னாது ‘தரின்’ என்றார். அணு வென்னும் ஒலி நுட்பத் தால்எழுத்தானாற்போல, எழுத்தென்னும் ஒலி நுட்பத்தால் மொழியாம் என்பார்‘பதம்’ என்றார். இப் பதவியலுக்கு மேற்கோள் ஆரியமே என்பார் மொழிஎன்னாது ‘பதம்’ என்றார். (நன். 128 சங்கர.)