பண்புப் பகுதிக்குச் சிறப்புவிதி

பண்புப் பகுதிகளாகிய கரு, செவ் முதலியன மைவிகுதியொடு சேர்ந்துகருமை, செம்மை முதலியனவாகிப் பண்புப் பொருளி னின்றும் வேறுபொருள்வகுக்கப்படாத நிலைப்பதம் ஆகும். மைவிகுதிக்குப் பண்புப்பொருளன்றிவேறுபொருள் இன்மை யின், செம்மை கருமை முதலியன சொல்நிலையால் பகுபதம்போன்று இருப்பினும் பொருள்நிலையால் பகாப்பதமேயாம். (நன். 135சங்கர.)