பண்புப் பகாப்பதங்கள்

செம்மை, சிறுமை. சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை,திண்மை, உண்மை, நுண்மை என்பன வும், இவற்றுக்கு மறுதலையான வெண்மை கருமைபொன்மை பசுமைகள், பெருமை, அணிமை, நன்மை, தண்மை, பழைமை, வன்மை, கீழ்மை,நொய்ம்மை, இன்மை, பருமை என்பனவும் இவைபோல்வன பிறவும் பண்புப்பகாப்பதம். (நன்.134 மயிலை.)இக்கூறிய வாய்பாடுகள் எல்லாம் சொல் நிலையால் பகுபத மாயினும்,மைவிகுதிக்குப் பகுதிப்பொருளன்றி வேறுபொரு ளின்மையின், பொருள்நிலையால்பகுக்கப்படா என்பார் ‘பண்பிற் பகா நிலைப்பதம்’ என்றார். (நன். 135சங்கர.)