செம்மை சிறுமை முதலிய பண்புச்சொற்கள் வருமொழியாக நிகழும் விகுதியோஅன்றிப் பதமோ புணரும்வழி, இறுதி விகுதியாகிய மை போதலும்,பண்புச்சொல்லின் இடையே நின்ற உகரம் இகரமாதலும், அதன் முதற்கண் நின்றகுறில் நெடிலாதலும், முதற்கண் நின்ற அகரம் ஐகாரமாதலும், இடையே நின்றவல்லொற்று இரட்டுதலும், முன்நின்ற மெய் திரிதலும், வருமொழிவல்லெழுத்திற்கு இனமான மெல் லொற்று மிகுதலும், பிறவும் உரியனவாம்.ஈறுபோதல் எல்லா விகாரத்துக்கும் கொள்க.எ-டு : நன்மை + அன் > நல் + அன் = நல்லன் – ஈறு போதல்கருமை + அன் > கரி + அன் = கரியன் – ஈறுபோதலும் இடை உகரம் இகரம்ஆதலும்பசுமை + அடை > பாசு + அடை = பாசடை – ஈறு போதலும், ஆதி நீடலும்சிறுமை + உயிர் > சிற்ற் + உயிர் = சிற்றுயிர் – ஈறு போதலும், தன் ஒற்றுஇரட்டலும்பசுமை + தார் > பசுந் + தார் = பசுந்தார் – ஈறு போதலும், இன ஒற்றுமிகுதலும்பசுமை + தார் > பைந் + தார் = பைந்தார் – ஈறுபோத லும், ஈற்றயல் உயிர்மெய்கெடுதலும், முதல் அகரம் ஐ ஆதலும், இன ஒற்று மிகுதலும்செம்மை + ஆ > செம் + ஆ > செத் + ஆ > சேத் + ஆ = சேதா – ஈறு போதலும், ஈற்றயல் மகரம் தகரமாகத்திரிதலும், முதல் உயிர் நீடலும்செம்மை + அன் = செம்மையன் – யகர உடம்படு மெய் பெற்று இயல்பாகமுடிந்தது. (நன். 136)கருங்குதிரை முதலாயின (பண்புத்தொகை ஆதலின்) பகுபதம் அல்லவேனும்,பண்பு அதிகாரப்பட்டமையால் பதப்புணர்ச்- சிக்கும் ஈண்டே சொன்னார் என்க.(பண்புத்தொகையெல் லாம் பண்புப்பெயர்ப் புணர்ச்சி பெறுமாறு கொள்க).(நன். 135 மயிலை.)