பட்டினப்பாக்கம்‌

பட்டினப்பாக்கம்‌ என்பதில்‌ உள்ள பட்டினம்‌, பாக்கம்‌ என்ற இருசொற்களும்‌ நெய்தல்‌ நிலத்து ஊரைக்குறிக்கும்‌ பொதுச்‌ சொற்கள்‌. பூம்புகார்‌ நகரத்தின்‌ ஒரு பிரிவு பட்டினப்பாக்கம்‌ என்ற பெயரையுடையதாய்‌ இருந்தது. அக்‌காலத்தில்‌ சிறந்திருந்த கடற்கரை நகரங்களின்‌ அமைப்பைப்‌ பண்டை இலக்கியங்கள்‌ ஒருவாறு காட்டுன்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும்‌ இரு பாகங்களையுடையதாய்‌ இருந்தது. அவற்றுள்‌ ஒருபாகம்‌ ஊர்‌ என்றும்‌, மற்றொருபாகம்‌ பட்டினம்‌ என்றும்‌ அழைக்கப்பட்டன. பூம்புகார்‌ நகரத்தின்‌ ஒரு பாகம்‌ மருவூர்ப்‌ பாக்கம்‌ என்றும்‌, மற்றொரு பாகம்‌ பட்டினப்‌ பாக்கம்‌ என்றும்‌ பெயர்‌ பெற்றன.** 47. மி100ார 08 காமி 1, ர. $ரர்பரரகக ஜகா ற. 389. 48. ஊரும்‌ பேரும்‌ ரா. பி, சேதுப்பிள்ளை பக்‌, 34, 152 இலக்கியத்தில்‌ ஊர்ப்பெயர்கள்‌ “
“கூழ்‌ உடை நல்‌ இல்‌ கொடும்பூண்‌ மகளிர்‌.
கொன்றை மென்சினைப்‌ பனி தவழ்பவைபோல்‌,
பைங்காழ்‌ அல்குல்‌ நுண்துகில்‌ நுடங்க
மால்வரைச்‌ சிலம்பில்‌ மகிழ்றந்து ஆலும்‌
பிலி மஞ்ஞையின்‌ இயலி, கால
கமனியப்‌ பொற்‌ ரிலம்பு ஒலிப்ப, உயர்நிலை
வான்‌ தோய்‌ மாடத்து, வரிப்பந்து அசைஇ
கைபுளை குறுந்தொடி. தத்த, பைபய
முத்தவார்‌ மணல்‌ பொற்கழங்கு ஆடும்‌
பட்டின மருங்கின்‌ அசையின்‌” (பத்துப்‌. பெரும்‌ 327 336)
“வால்‌ இதை எடுத்த வளிதரு வங்கம்‌
பல்வேறு பண்டம்‌ இழிதரும்‌ பட்டினத்து (ஷே. மதுரைக்‌ 536537)
“புலம்பெயர்‌ மாக்கள்‌ கலந்து, இனிது, உறையும்‌,
முட்டாச்‌ சிறப்பின்‌ பட்டினம்‌ பெறினும்‌” (௸.பட்‌. 217 218)
“மருவூர்‌ மருங்கின்‌ மறங்‌ கொள்‌ வீரரும்‌
பட்டின மருங்கிற்‌ படைகெழு மாக்களும்‌
முந்தச்‌ சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறன்‌ மன்னற்குற்றதை யொழிக்‌ கென” (சிலப்‌. 5 : 76 79)
“ஆற்று வீயரங்கத்து வீற்று வீற்றாகிக்‌
குரங்கமை யுடுத்த மரம்‌ பயி லடுக்கத்து
வானவ ருரையும்‌ பூநா றொரு சிறைப்‌
பட்டினப்‌ பாக்கம்‌ விட்டனர்நீங்க“ …. (ஷே. 10: 156 159)