பட்டணம்

பேரூர் என்ற பொருள் இருந்தாலும், உண்மையில் இன்று சிற்றூர்களே “பட்டணம்” எனப் பெயர் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்து ஊர்கள் “பட்டினம்” எனப்படுமென்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். [16] ஆனால் இவ்வரையறை சங்கவிலக்கியத்தில் பெரும்பாலும் தெளிவாக உருப்பெறவில்லை என்கிறார் கி.நாச்சிமுத்து.[17] இவ்வடிவமே காலப்போக்கில் பட்டணம் என்று சொல் நிலையிலும், பொருள் நிலையிலும் மாறியிருக்கிறது. ஊர்களைக் குறிப்பிடும் பொதுக்கூறாகப் பிற்காலப் பாண்டியர் காலத்தில், “பட்டணம்” பயன்பட்டிருக்கிறது.