‘படு’ விகுதி செயப்படுபொருள்உணர்த்தல்

‘எனப்படுப’ என்பது ‘என்’ என்னும் முதனிலைமீது செயப்படு பொருள்உணர்த்தும் ‘படு’ விகுதியும் அகரச் சாரியையும் வந்து புணர்ந்து‘எனப்படு’ என நின்றவழி, அதுவும் முதனிலைத் தன்மைப்பட்டு, மேல் வரும்அகரவிகுதியும் பகரஇடை நிலையும் பெற்று ‘எனப்படுப’ என முடிந்தபலவறிசொல்.‘இல்வாழ்வான் என்பான்’ (குறள் 41) என்பதனைச் செயப்படு பொருள்உணர்த்தும் படு விகுதியை விரித்தே ‘எனப்படுவான்’ என்று பொருள்செய்தலானும் படு விகுதி செயப்படுபொருள் உணர்த்தும் இயல்பிற்று என்பதுபெறப்படும். (சூ.வி. பக். 40,41)