தாழ்ந்த ஓசையான் கூறுவது படுத்தலோசையாம். வினையைப் பெயராக்கவேண்டிய இடத்தும் உரிச்சொல்லைப் பெயராக்க வேண்டிய இடத்தும்படுத்தலோசையால் கூறுதல் வேண்டும்.எவன் என்பது படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ. சொ. 221 நச்.உரை)அஃது இயல்பாக வினாவினைக்குறிப்புச் சொல்.தெவ் என்பது உரிச்சொல்லாயினும், படுத்தலோசையால் பெயராயிற்று. (தொ.எ. 184 நச். உரை)