பகுபதம்

இடுகுறியாய் நிற்கும் பகாப்பதம் போலாது, பகுதி விகுதி யாகவும்அவற்றோடு ஏனைய உறுப்புக்களாகவும் பகுக்கப் படும், பொருள் இடம் காலம்சினை குணம் தொழில் என்னு மிவை பற்றி இவை காரணமாக வரும் பெயர்களும்,தெரிநிலை யாயும் குறிப்பாயும் காலத்தைக் கொள்ளும் முற்று வினை யெச்சம்பெயரெச்சம் என்னும் வினைச்சொற்களும் பகுபத மாம். வினைமுற்றுப் பகுபதம்எனவே, அம்முற்று வேற்றுமை கொள்ள வரும் வினையாலணையும் பெயரும்பகுபதமாம். புளி, கடு முதலிய ஆகுபெயர்கள் காரணத்தான் வருமேனும் விகுதிமுதலிய உறுப்பு இன்மையின் அவை பகுபதம் ஆகா. நட, வா முதலியன விகுதியொடுபுணராமையின் பகுபதம் ஆகா எனக் கொள்க.எ-டு : பொன்னன், அகத்தன், ஆதிரையன், கண்ணன், கரியன், ஊணன் -பெயர்ப் பகுபதம் ஆறு.நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – தெரிநிலை உடன்பாட்டுவினைமுற்று.நடந்த, நடக்கின்ற, நடக்கும் – தெரிநிலை உடன் பாட்டுப்பெயரெச்சம்.நடந்து, நடக்க, நடக்கின் – தெரிநிலை உடன்பாட்டுவினையெச்சம்.நடவான் – எதிர்மறை வினைமுற்றுநடவாத; நடவாமல் – எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்கள்பொன்னன், அகத்தன், ஆதிரையன் – குறிப்பு வினைமுற்றுகரிய, பெரிய; அன்றி, இன்றி – குறிப்புப் பெயரெச்சவினையெச்சங்கள்நடந்தான், நடந்தவன் – தெரிநிலை வினையா லணையும் பெயர்பொன்னன்…. ஊணன் – குறிப்பு வினையாலணையும் பெயர். (நன். 132சங்.)