பொருள் ஆதி அறுவகைப் பகாப்பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம்.போல், நிகர் – இவை இடைப் பகுதிகளாம். சால், மாண் – இவை உரிப்பகுதிகளாம். செம்மை, சிறுமை – இவை பண்புப் பெயராகிய விகாரப்பகுதிகளாம். புக்கான், பெற்றான், விட்டான் என்றும் (பகுதிவிகாரப்பட்டு) வரும்.கேள், கொள், செல், தா, சா, வா, கல், சொல் – இவையும்விகாரப்பகுதிகளாம். (வினைச்சொல்லாங்கால், இவை விகாரப்படுவன.)உழு, தொழு, உண், தின் – இவை இயல்புப் பகுதிகளாம்.அன், ஆன், அள், ஆள், அர், ஆர், து, ஐ, அ – பிறவும் ஐம்பாற் பெயர்ப்பகுபத விகுதியே.காலம் காட்டா இடைநிலைகள் ஆமாறு உணர்த்துதும்:பெயர்ப்பகாப்பதமும் வினைப்பகாப்பதமும் ஆகிய பகுதி நிறுத்திநச்சாரியையும் ஞச்சாரியையும் இடைநிலையாக வைத்து அவ்வப்பாலுக்குரியவிகுதியை ஈற்றின்கண்ணே தந்தது பகுபதமாம்.கிளை இளை கடை நடை – எனப் பெயர்ப்பகுதியும், அறி துணி குறை மொழி -என வினைப்பகுதியும் நிறுத்தி, ந் ஞ் – என இடைநிலையும் அர் எனஇறுதிநிலையும் கூட்டிக் கிளைநர் இளைநர் கடைநர் நடைநர் – என்றும்,கிளைஞர் இளைஞர் கடைஞர் நடைஞர் – என்றும், அறிநர் துணிநர் குறைநர்மொழிநர் – என்றும், அறிஞர் துணிஞர் குறைஞர் மொழிஞர் – என்றும்புணர்ந்து வருதல் காண்க.‘நண்ணலும் நெறியே’ என்ற மிகையால், வலைச்சி வண்ணாத்தி – இவற்றுள்சகரமெய்யும் தகரமெய்யும் இடைநிலையாயின. பிறவும் அன்ன. (தொ. வி. 83 -85 உரை)