பகுதி, பெரும்பாலும் வேறுபடாது பகுபதத்தின் முதற்கண் நிற்பது;விகுதி, வேறுபட்டு இறுதிக்கண் நிற்பது. இடைநிலை, பெரும்பாலும் இனையதுஇத்துணையது என அளத்தற்கு அரிதாய்ப் பதம் முடிப்புழிக் காலமும்பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவது. சாரியை, அன் ஆன் முதலாகஎடுத்தோதப்பட்டு எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாகச் சிறுபான்மைபொருள்நிலைக்கு உதவிசெய்து பெரும்பாலும் இன்னொலியே பயனாக வருவது.சந்தி, இன்னது வந்தால் இன்னது ஆம் எனப் புணர்வழித் தோன்றும் செய்கை.விகாரம், செய்யுள் தொடையும் பதத்துள் அடிப்பாடும் ஒலியும் காரணமாகவலித்தல் மெலித்தல் முதலாக ஆக்குவது. இஃது இடைநிலை முதலியவற்றால்முடியாதவழி வருவது. (இ. வி. எழுத். 42 உரை)தன் இயல்பினான் நிற்பது பற்றிப் பகுதி என்றும், அவ்வாறு நிற்கும்பகுதிப்பொருளைத் தன்னகப்படப் பின்னின்று விகாரப்படுத்தலால் விகுதிஎன்றும், பகுதிவிகுதிகளின் இடை நிற்பதால் இடைநிலை என்றும், பகுதிவிகுதிகளைச் சார்ந்து இயைந்து நிற்றலால் சாரியை என்றும், நிலைமொழி வருமொழி சந்தித்ததால் உண்டாகிய தோன்றல் திரிதல் கெடுதல் களைச் சந்திஎன்றும், செய்யுள் அடி தொடை முதலிய வற்றால் வலித்தல் மெலித்தல் முதலியவிகாரப்படுதலால் விகாரம் என்றும் காரணக்குறியாய் வந்தன. (நன். 133இராமா.)