பகுதியை இடைப்பகாப்பதம் எனல்

‘முதனிலைப் பெயர்வினை’ என்னாது ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றமையின்,இருவகைப் பகுபதத்துள்ளும் (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்)பகுதியும் ஓர் உறுப்பு ஆதலின் விகுதி முதலியவற்றொடு தொடர்ந்துநிற்பதன்றிப் பிரிந்து நில்லாமையானும், பிரிந்தவழிப் பகுதியாய்உறுப்பின் பொருள் தாராமையானும் இருவகைப் பகுதி உறுப்புக்களும்‘இடைப்பகாப்பதம்’ என்பது பெற்றாம். (நன். 134 சங்கர.)