பகுதிப்பொருள் விகுதி

தமக்கென ஒருபொருளின்றிப் பகுதியின் பொருளே தம்பொரு ளாய்ப்பகுதியோடு இணைந்து பகுதித்தன்மைப் பட்டுப் பின் இடைநிலை விகுதிகளோடுஇணைந்து சொல் லாக்கத்துக்கு உதவுவன. இரு, இடு முதலியன பகுதிப்பொருள்விகுதி. எழுந்திருந்தான், எழுந்திட்டான் என்புழி, இரு இடு என்பனபகுதிப்பொருள் விகுதியாய், முதனிலையோடு இயைதற்குரிய துச்சாரியை பெற்றுஎழுந்திரு எழுந்திடு – என்று நின்றவழி, அவையும் முதனிலைத்தன்மைப்பட்டு மேல்வரும் விகுதி முதலியன ஏற்கும். எழுந்திருக்கின்றான்எழுந்திருப்பான் எழுந்திடுகின்றான் எழுந்திடுவான் என்பன முறையேநிகழ்காலம் எதிர்காலம் காட்டும். சொற்களில் இரு இடு – என்றபகுதிப்பொருள் விகுதி வந்தமைக்கு எடுத்துக்காட்டாம். (சூ. வி. பக்.41)